பால்புதுமையினருக்கான எழுத்துப் பயிற்சிப்பட்டறை
பயிற்சியின் கரு - பால்புதுமையினரின் கதைகள்.
பால்புதுமையினருக்கான முதல் எழுத்துப் பயிற்சிப்பட்டறையை அறிவிப்பதில் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் (QCC) பெருமகிழ்ச்சி கொள்கிறது. சுயாதீன வெளியீட்டுத்தளமான QCC, தங்களின் வேறுபட்ட அனுபவங்களைத் தாங்களே கூறும் வகையில் பால்புதுமையினருக்கு இவ்வெழுத்துப்பயிற்சியை வழங்கவிருக்கிறது. இப்பயிற்சியைப் பெற முன்னனுபவம் வேண்டியதில்லை. பால்புதுமையினரை மையமாகக் கொண்ட பயிற்சிப்பட்டறைகள் அரிதாகவே உள்ள நிலையில், இக்குறையை நீக்கும் பொருட்டும், LGBTQI நபர்களின் எழுத்தார்வத்தை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் பொருட்டும் இப்பயிற்சிப்பட்டறையை நடத்தவிருக்கிறோம்.
இப்பயிற்சிப்பட்டறை அமையக் காரணம்:
-
நமது கதைகள் யாரால் கூறப்படுகின்றன? அவற்றைக் கட்டுப்படுத்துபவர்கள் யார்?
-
நம்மைப்பற்றிய கதைகள் நம்முடைய அனுபவங்களை ஒத்திருக்கின்றனவா? நம்மைப்பற்றி / நமது போராட்டங்களைப் பற்றி இவ்வுலகம் அறிந்துகொள்ள வேண்டியவை.
-
ஏன் சில கதைகள் மட்டும் அதிகம் கவனிக்கப்படுகின்றன?
பயிற்சிப்பட்டறையின் நோக்கம்:
பால்புதுமையினரை அதிகம் எழுத ஊக்குவிப்பதன் மூலம் தங்களைப் பற்றிய விவரங்கள் எக்காரணங்களுக்காகவும் திரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும். இலக்கியத் துறையிலும், பொது ஊடகங்களிலும் எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தைக் கொண்டே இப்பயிற்சியை வடிவமைத்துள்ளோம்.
காலம் மற்றும் இடம்:
இப்பயிற்சியானது சென்னையில் ஒரு நாள் நடைபெறும். பயிற்சியில் பங்கெடுப்போருக்கு தங்கும் வசதி செய்துதர இயலாது. இப்பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. பயிற்சிக்கான தேதி விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்த பின்பு அறிவிக்கபபடும்.
பயிற்றுவிக்கும் மொழி தமிழ். கலந்துகொள்பவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதலாம்.
மொத்த இடங்களின் எண்ணிக்கை – 10
விண்ணப்பிக்க:
விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை தமிழிலோ, ஆங்கிலத்திலோ team@queerchennaichronicles.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தில் இடம்பெரவேண்டியவை:
-
தங்களைப் பற்றிய சிறு குறிப்பு (100 வார்த்தைகளுக்கு மிகாமல்)
-
ஏன் இப்பயிற்சிக்கு விண்ணப்பித்தீர்கள் என்பதை 250 வார்த்தைகளுக்கு மிகாமல் கூறவும்
-
முன்னரே எழுதிய அனுபவம் இருப்பின், அவற்றின் மாதிரியை/ இணையதள முகவரியை இணைக்கவும் (கட்டாயமில்லை)
இவைஅனைத்தும் தங்களைப்பற்றி அறிந்துகொள்வதற்காகவே, பிழைகளைக் குறித்து வருந்த வேண்டாம்.
-
விண்ணப்பிக்க கடைசி நாள் 15 அக்டோபர் 2018.
-
பயிற்சிப்பட்டறை நவம்பர் மாதம் நடக்கும்.
ஸ்பான்சராக பங்குகொள்ள:
இந்த எழுத்துப்பயிற்சிப்பட்டறைக்கு ஏதேனும் ஸ்பான்சராக பங்களிக்க விரும்பினாலோ அல்லது வேறுவழிகளில் பயிற்சிப்பட்டறைக்கு உதவ விரும்பினாலோ team@queerchennaichronicles.com -க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
~*~*~