விடுபட்டவை - விமர்சனங்கள்

Reviews
"... so moved and enriched by the poignant yet deeply serious politics you put forward. It’s a must read for anyone but particularly to those who think of themselves as allies of the queer community." - Prema Revathi, Poet.
~*~
"...இந்த சமூகம் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள் மீது சுமத்தும் அசிங்கமான ஆபாசமான எண்ணங்களுக்காக தமக்குத்தாமே குற்றவுணர்ச்சி கொள்வதற்கு இந்த புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன்." -சல்மா, எழுத்தாளர்
Prema Revathi, Poet
அருமையான கவிதைகள் - சிறப்பான எழுத்து - கதைகள் குயர் வாழ்க்கையை மிக இயல்பாகவும் உண்மையாகவும் மையப்படுத்தும் முறையில் முக்கியத்துவம் பெறுகின்றன. . . எல்லாவற்றுக்கும் மேலாக கட்டவிழ்க்கப்பட்ட நாவுகள் கட்டுரையில் intersectionality பற்றிப் பேசும் விதமும் அதில் வெளிப்படும் உங்களது புரிந்துணர்வும் ஊக்கமளிக்கின்றன. வணக்கம்!
சல்மா - எழுத்தாளர், திமுக பெண்கள் அணியின் துணைச்செயலாளர்
“புத்தக கண்காட்சியில் கருப்பு பிரதிகள் ஸ்டாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளை தற்செயலாக அந்த புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு பாலின ஈர்ப்பினர்க்குறித்த நமது சமூக பார்வைகள் மற்றும் நோய்க்கூறுகளை அனாயாசமாக நம்முன் எடுத்து வைத்து இருக்கிறார் கிரிஷ் . இந்த சமூகம் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள் மீது சுமத்தும் அசிங்கமான ஆபாசமான எண்ணங்களுக்காக தமக்குத்தாமே குற்றவுணர்ச்சி கொள்வதற்கு இந்த புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
Let this sick society question what we consider as natural. The poems are fantastic. Warm hugs Gireesh, special wishes for the poetry." - Salma - Writer, Deputy Secretary of Woman's Wing, DMK
மண்குதிரை, தமிழ் ஹிந்து புத்தக விமர்சனம் | Mankuthirai, Tamil Hindu Book Review
ஒழுக்கங்களுக்கு இடையில்...
தர்மினி, கவிஞர் | Tharmini, Poet
"சில புத்தகங்களைப் படித்து முடித்த பின் உடனே மறந்துவிடுகின்றோம். சிலவற்றைப் பற்றி யாருடனாவது உரையாடவேண்டும் என்று தோன்றும். இன்னும் சில, நம்மைக் கடந்து செல்ல விடாமல் போக - வரக் கரைச்சல் தந்தபடியிருப்பவை. இவ்வாசிப்புப் பற்றி எப்படி ? எவ்விதம் ?நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்ற பயத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
யாழன் ஆதி, எழுத்தாளர் | Yazhan Aathi, Writer
...கிரீஷின் வாழ்வின் மீது அவரது எதிர்ப்பார்ப்புகளின்மீது சமூகம் தூவிய அக்கறையின்மையின் பார்த்தீனியம் இந்தச் சமூகத்தின் மீதே படர்ந்து துயர் தருவதாக மாறிவிடுகிறது. ஓர்பாலீர்ப்பு என்னும் பாலியல் நடத்தையைப் புரிந்துக் கொள்ளாத சமூக நடத்தையை கதையாகவும் கடிதமாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் விமர்சனங்களாகவும் பட்டவர்த்தனமாகவும் அவர் எழுதியிருக்கிறார். கிரிஷின் இத்தகைய வெளிப்பாடு சமுக அமைப்பில் புதிய புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்...
தன சக்தி, கவிஞர் | Dhana Sakthi, Poet
...ஓர் பாலீர்ப்பாளர்கள் மாற்று பாலினத்தவர்கள் பற்றி எழுத துடிப்பவர்கள் அவர்களுக்காக கலை படைப்பு ஆக்கம் செய்ய நினைப்பவர்கள் மேலும் தினம் எதாவது ஒரு வகையில் டிபன் பாக்ஸ் என்றோ ஹே விளம்பி என்றோ பகடி செய்து ஆர்கஸம் அடைபவர்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்துவிடுங்கள் ப்ளீஸ் .கிரீஸ் உங்களிடம் ஆகச்சிறந்த படைப்பாளியிருக்கிறான் எழுத்தாக்குங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள் என்றாவது இந்த பொது சமூகம் நின்று நிதானிக்கலாம்...மேலும் படிக்க...